அரசுக் கலைக்கல்லூரி கவுரவ விரிவுரையாளர் பணிக்கு உரிய கல்வித்தகுதி பெறாதவர்கள் நியமனம்: உறவினர்களை மட்டும் சேர்ப்பதாக குற்றச்சாட்டு

சென்னை: தமிழகத்தில் அரசுக் கலைக்கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர் பணிக்கு உரிய கல்வித்தகுதி பெறாத பலர் நியமிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டு எழுந்துள்ளது.தமிழகத்தில் அரசுக் கல்லூரிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லாத நிலையில் தொகுப்பூதிய அடிப்படையில் கவுரவ விரிவுரையாளர்களை பணியில் நியமிக்க தமிழக அரசு முடிவு செய்து 2009ம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டது.  கவுரவ விரிவுரையாளர் பணிக்கு செட், நெட் தேர்வில் தேர்ச்சி ெபற்றிருப்பது, எம்.பில் படித்து முடித்திருப்பது கல்வித்தகுதியாக நிர்ணயிக்கப்பட்டது.கவுரவ விரிவுரையாளர் பணி, தொகுப்பூதிய அடிப்படையிலான பணி என்றாலும் முறையாக அறிவிக்கை வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால் அறிக்விக்கை வெளியிடாமலேயே அனைவரும் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் 2013ம் ஆண்டு முதல் பணியில் சேர்பவர்களுக்கு முதுநிலை படிப்புடன் முனைவர் பட்டம் பெற்றிருப்பது கட்டாயமாக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் அரசுக் கலைக்கல்லூரிகளில் பணியாற்றும் போதுமான  கல்வித்தகுதி பெறவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கவுரவ விரிவுரையாளர்களை கல்லூரி முதல்வர்களே நேரடியாக நியமிக்கலாம் என்ற நிலை இருந்ததால் போதுமான கல்வித்தகுதி பெறாத பலர் கவுரவ  விரிவுரையாளர்களாக நியமிக்கப்பட்டனர்.

கல்லூரி முதல்வர்கள், துறைத் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தால், வேண்டியவர்கள், உறவினர்களை பணியில் நியமித்துள்ளனர். அதில் இடஒதுக்கீட்டின்படியான இனச்சுழற்சி முறையையும் பின்பற்றவில்லை. அதே  நிலையே தற்போது வரை தொடர்கிறது. அரசுக்கலைக்கல்லூரிகளில் கடந்த ஆண்டு மே மாத நிலவரப்படி, முதல் சிப்ட்டில் 1,883 பேரும், இரண்டாவது சிப்டில் 1,661 பேரும்  என மொத்தம் 3,554 பேர் பணியில் உள்ளதாக  அரசுத்தரப்பில் கூறப்படுகிறது. இவர்களில் பாதி பேர் 2009, 2013ல் அரசுத் தரப்பில் குறிப்பிடப்பட்ட கல்வித்தகுதி பெறவில்லை என்று கூறப்படுகிறது. ஏற்கனவே உதவிப்பேராசிரியர் நியமனத்துக்கு பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தரே லஞ்சம் வாங்கியது, விடைத்தாள் மறுமதிப்பீட்டில் முறைகேடு செய்ய அண்ணா பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர்கள் லஞ்சம் வாங்கியது,  பணம் பெற்றுக்கொண்டு வினாத்தாள் விற்பனை செய்தது என உயர்கல்வித்துறை மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளது. அவற்றில் சிலவற்றின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் கவுரவ விரிவுரையாளர்கள் நியமனத்தில் விதிகள் ஏதும் முறையாக பின்பற்றப்படாதது கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியில்  ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: