பொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கியது

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்படும் சிறப்பு பேரூந்துகளுக்கான முன்பதிவு தொடங்கியது. பேருந்துகளில் வெளியூர் செல்வோருக்கு வசதியாக, சென்னையில் 30 முன்பதிவு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. பொங்கலையொட்டி, 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை 24 ஆயிரத்து 708 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னையில் இருந்து 14 ஆயிரத்து 263 பேருந்துகள் இயக்கப்படுவதால், அவற்றில் முன்பதிவு செய்வதற்கு வசதியாக மையங்கள் இன்று திறக்கப்பட்டன. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குரவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், முன்பதிவு மையங்களை திறந்து வைக்கிறார்.

கோயம்பேட்டில் 26கவுண்ட்டர்களும், தாம்பரம் சானிடோரியத்தில் இரண்டு கவுண்ட்டர்களும், பூந்தமல்லி, மாதவரம் ஆகிய இடங்களில் தலா ஒன்று என 30 சிறப்பு முன்பதிவு மையங்கள் இன்று முதல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பூவிருந்தவல்லியிலிருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு மற்றும் ஓசூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். பிற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் வழக்கம்போல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் .கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருக்கைகள் பூர்த்தியான பேருந்துகள் தாம்பரம், பெருங்களத்தூர் செல்லாமல் மதுரவாயல், பூவிருந்தவல்லி, நசரத்பேட்டை, வெளிசுற்று சாலை வழியாக வண்டலூர் செல்லும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: