கல்லூரி பேராசிரியர் தேர்வு முடிவு வெளியீடு

சென்னை: கல்லூரி ஆசிரியர்களுக்காக பல்கலைக்கழக மானியக் குழுவின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் தேசிய தகுதித் தேர்வை முதல் முதலாக தேசிய தேர்வு முகமை நடத்தியது. கடந்த மாதம் 18ம் தேதி  முதல் 22ம் தேதி வரை இந்த தேர்வு நாடு முழுவதும் நடத்தப்பட்டது. மொத்தம் 85 பாடங்களில் இந்த தேர்வு நடந்தது. நாடு முழுவதும் இந்த தேர்வில் 9 லட்சத்து 56 ஆயிரத்து 837 பட்டதாரிகள் எழுத விண்ணப்பித்து இருந்தனர்.  இதற்காக நாடு முழுவதும் 598 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.

தேசிய தேர்வு முகமையின் மூலம் 742 தேர்வு மேற்பார்வையாளர்கள், 295 நகர ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் தேசிய தகுதித் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை  வெளியிட்டது.  

இந்த தேர்வில் 6 லட்சத்து 81 ஆயிரத்து 930 பேர் பங்கேற்றனர். 44 ஆயிரம் ேபர் உதவி பேராசிரியர் பணிக்கு தகுதி பெற்றுள்ளனர். 3 ஆயிரத்து 883 பேர் மத்திய அரசு வழங்கும் ஆராய்ச்சி ஊக்கத் தொகை  பெறுவதற்கான தகுதி ெபற்றுள்ளனர். தேர்ச்சி பெற்றதற்கான சான்றுகளை பல்கலைக் கழக மானியக் குழு விரைவில் வழங்க உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: