ஐஎப்எஸ் மெயின் தேர்வு ரிசல்ட் இந்திய அளவில் 223 பேர் தேர்ச்சி

சென்னை: ஐஎப்எஸ் மெயின் தேர்வுக்கான ரிசல்ட் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய அளவில் 223 பேரும், தமிழகத்தில் 27 பேர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். இவர்களுக்கான நேர்முக தேர்வு டெல்லியில் வருகிற 28ம் தேதி தொடங்குகிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்(யு.பி.எஸ்.சி.) ஆண்டு தோறும் ஐஏஎஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ்., ஐ.எப்.எஸ். உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வை நடத்தி வருகிறது. இந்த நிலையில் யு.பி.எஸ்.சி. இந்திய வனப்பணிக்கான (ஐஎப்எஸ்) 110 காலி பணியிடங்களை நிரப்புவதற்கு முதல்நிலை தேர்வை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 3ம் தேதி நடத்தியது. இத்தேர்வை சுமார் 6 லட்சம் பட்டதாரிகள் எழுதினர். இதில் 1174 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் தமிழகத்தில் இருந்து மட்டும் 74 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான மெயின் தேர்வு கடந்த டிசம்பர் 2ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடந்தது. இந்த தேர்வுக்கான ரிசல்ட்டை யு.பி.எஸ்.சி. வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து சங்கர் ஐஏஎஸ் அகாடமி இயக்குனர் வைஷ்ணவி கூறியதாவது: மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம்(யு.பி.எஸ்.சி) ஐஎப்எஸ் பணிக்கான மெயின் தேர்வு முடிவை இணையதளமான www.upsc.gov.inல் வெளியிட்டுள்ளது. மெயின் தேர்வில் இந்தியா முழுவதும் 223 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து 27 பேர் தேர்ச்சி  பெற்றுள்ளனர். இதில் சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் சென்னை பயிற்சி மையத்தில் 19 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை பெங்களூரு, திருவனந்தபுரம் பயிற்சி மையத்தில் பயற்சி பெற்ற 36 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு டெல்லியில் உள்ள யு.பி.எஸ்.சி. அலுவலகத்தில் வருகிற 28ம் தேதி முதல் நேர்காணல் தொடங்குகிறது. இதில் தேர்ச்சி பெறுவோர் அவர்கள் பெற்ற மதிப்பெண், இடஒதுக்கீடு அடிப்படையில் அவர்களுக்கு பணிகள் ஒதுக்கப்படும். இவ்வாறு வைஷ்ணவி  கூறினார்.

நேர்முக தேர்வு இலவச பயிற்சி

ஐஎப்எஸ் நேர்முக தேர்வை எதிர்கொள்ளும் அனைவருக்கும் கட்டணம் இன்றி இலவசமாக மாதிரி தேர்வு நடத்தப்படுகிறது. அகில இந்திய அளவில் மிகச்சிறந்த ஐ.எப்.எஸ். ஐஏஎஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், பிற துறைகளை சார்ந்த சான்றோர்களை கொண்டு மாதிரி தேர்வு நடத்தப்பட உள்ளது. இலவச நேர்முக தேர்வு பயிற்சியில் பங்குபெற விரும்பும் மாணவர்கள் interview@shankarias.inல் என்ற மின்னஞ்சல் முகவரிக்கும், 6379784702 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று சங்கர் ஐஏஎஸ் அகாடமி தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: