உப்பு நீர் வழங்கி எருமைகளுக்கு பாரம்பரிய விழா...நீலகிரியில் பழங்குடியினர் நடத்தினர்

ஊட்டி: தோடர் பழங்குடியினர் வளர்ப்பு எருமைகளுக்கு உப்பு வழங்கும் ‘உப்பட்டும்’ பாரம்பரிய விழா ஊட்டி அருகேயுள்ள முத்தநாடு மந்தில் நேற்று நடந்தது.நீலகிரி மாவட்டத்தில் வாழும் தோடர் பழங்குடியின மக்கள் பல்வேறு பாரம்பரிய நிகழ்ச்சி மற்றும் விழாக்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். அதேபோல், அவர்களின் முக்கிய வாழ்வாதாரமான எருமைகளுக்கு என்றும் ஒரு விழா நடத்தி வருகின்றனர். இவ்விழா, ஊட்டி அருகேயுள்ள முத்தநாடு மந்தில் நேற்று கொண்டாடப்பட்டது.

இதற்காக, அங்குள்ள மைதானத்தில் பள்ளம் தோண்டி அதில் நீரை நிரப்பினர். பின், உப்பை கொட்டினர். ஒவ்வொருவராக தாங்கள் வளர்க்கும் எருமைகளும் மற்றும் கோயில் எருமைகளை அழைத்து வந்து அந்த உப்பு நீரை குடிக்க வைத்தனர். பின், பழங்குடியின மக்கள் அந்த நீரை புனித நீராக கருதி அனைவரும் பருகினர். தொடர்ந்து, அங்குள்ள பாரம்பரிய ேகாயிலை சுற்றிலும் பாரம்பரிய உடை அணிந்து நடனமாடினர். இந்த விழா உப்பட்டும் விழா என அவர்கள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: