குறைவான குழந்தைகள் உள்ள சத்துணவு மையங்கள் மூடல்?: அமைச்சர் சரோஜா விளக்கம்

நாமக்கல்: சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்களை மூடும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை என அமைச்சர் சரோஜா கூறினார்.நாமக்கல்லில் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்களை மூடும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை. நிர்வாக காரணங்களால், 25 குழந்தைகளுக்கு குறைவாக உள்ள மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு, அருகாமையில் உள்ள  மையங்களில் இருந்து உணவு சமைத்து எடுத்து வந்து பரிமாறப்படும். தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் அதிகாரிகள், பயனாளிகளிடம் பணம் கேட்பதாக துறை செயலாளரிடம் புகார்கள் வந்துள்ளன.

அந்த புகார்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது  உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.தமிழகத்தில் 54,449 அங்கன்வாடி மையங்களும், 4,449 குறு அங்கன்வாடி மையங்களும் செயல்படுகிறது. இவற்றில் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் 2,383 அங்கன்வாடி மையங்களில் படிக்கும் குழந்தைகளுக்கு,  நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களை கொண்டு எல்கேஜி, யுகேஜியில் ஆங்கில வழி கல்வி திட்டத்தை, முதல்வர் பழனிசாமி, பொங்கல் பண்டிகைக்கு பிறகு தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்திற்காக பள்ளிக்கல்வித்துறை,  ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில், ₹7.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளுக்கு 4 சீருடை, புத்தக பை, கிரேயான், புத்தகம், உபகரணங்கள் ஆகியவை  பள்ளிக்கல்வித் துறை வழங்கும். அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கையை அதிகரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சரோஜா தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: