ஆதிதிராவிட நலப் பள்ளிகளில் காலி பணியிடம் நிரப்ப அனுமதி: அரசாணை வெளியீடு

சென்னை: அரசு கூடுதல் செயலாளர் வெளியிட்டுள்ள அரசாணை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிகமாக தொகுப்பு ஊதிய அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்க அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு பழங்குடியினர்  உண்டு உறைவிடப்பள்ளிகளில் காலியாக இருந்த இடைநிலை, பட்டதாரி, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை ஒப்பந்த முறையில் தலா ₹8000, ₹9000, ₹10000 என்ற ஊதியத்தில் தற்காலிகமாக நியமிக்க  ஏற்கனவே ஆணையிடப்பட்டது.

ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் தற்போது 175 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள், 193 பட்டதாரி ஆசிரியர், 108 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் நலப் பள்ளி– ்களில் காலியாக உள்ள பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிரப்ப ஆதிதிராவிடர் நல இயக்குநருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இவ்வாறு அரசு கூடுதல் செயலாளர் ஆணையில் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: