குட்கா ஊழல் வழக்கில் 6 காவல் ஆய்வாளர்கள், துணை காவல் ஆணையரிடம் சிபிஐ அதிரடி விசாரணை

சென்னை: குட்கா ஊழல் வழக்கில் 6 காவல் ஆய்வாளர்கள், துணை காவல் ஆணையரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ரமணா ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டு வரவழைக்கப்பட்டு, 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது. அவர்கள் அளித்த தகவலின் அடிப்படியில் பல்வேறு பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர். தற்போது காவல் துரையினரிடம் விசாரணையை தொடங்கியுள்ளனர். தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களான குட்கா, பான்மசாலா உள்ளிட்டவை தடையின்றி விற்பனை செய்வதை தடை செய்யாத அதிகாரிகள் மீது தற்போது விசாரணையானது நடைபெற்று வருகிறது.

அப்போது மாதவ்ராவ், உமா சங்கர் குப்தா உள்ளிட்ட குட்கா நிறுவன உரிமையாளர்கள் குட்காவை தயாரித்த போது மன்னர் மன்னன் ஏசி, ஆய்வாளர்கள் சிலர் அங்கு ஆய்வு நடத்தியதாக முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் காவல் ஆணையரிடம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர்கள் என் அதை தடை செய்யவில்லை, இது தொடர்பாக என் காவல் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படவில்லை என்ற சர்ச்சை சமீப காலமாக நிலவி வந்தது. இதனை அடிப்படியாக கொண்டு தொடர்ந்து அந்த காலகட்டத்தில் பணியில் இருந்த ஆய்வாளர்கள் மற்றும் துணை ஆணையர்கள்  ஆகியோரை சிபிஐ விசாரணை நடத்த திட்டமிட்டிருந்தது.

அதன் அடிப்படையில் ஒரு துணை ஆணையர், 6 ஆய்வாளர்களிடம் 2வது நாளாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர்களிடம் நடத்தப்படும் விசாரணையை அடிப்படியாக கொண்டு அடுத்தகட்டமாக காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: