இந்திய பொருளாதாரத்தை தனிமைப்படுத்த யாராலும் முடியாது : அருண் ஜேட்லி பேட்டி

டெல்லி; ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் மற்றும் தொழிலதிபர் விஜய் மல்லையா விவகாரம் உள்ளிட்டவற்றில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பொய் கூறுவதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார். இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள அவர், காங்கிரஸ் ஆட்சியின் போது வராக்கடன் ரூ.8.5 லட்சம் கோடியை தாண்டியது. ஆனால், ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் ரூ.2.5 லட்சம் கோடி என கூறியதாக தெரிவித்தார். ஜிஎஸ்டி அமலுக்கு பின்னர் நேரடி மற்றும் மறைமுக வரி வருவாய் அதிகரித்துள்தாக கூறியுள்ள ஜேட்லி, வங்கித்துறையை மத்திய அரசு பலப்படுத்தி வருகிறது என்றார். விஜய் மல்லையா விவகாரத்தில் ராகுல்ங தொடர்ந்து பொய்களை கட்டவிழ்த்துவிட்டு வருவதாக சாடினார். மல்லையாவிற்கு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் கடன் வழங்கப்பட்டது. நீண்ட கால அரசியலுக்கு ராகுல் காந்தி உண்மையை பேச கற்று கொள்ள வேண்டும் என்றார்.

ரஃபேல் விவகாரத்தில் காங்கிரஸ் அரசியல் செய்கிறது. இது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்றார். உலக பொருளாதாரத்தில் இந்தியா ஒரு அங்கமாகி விட்டது. இந்திய பொருளாதாரத்தை தனிமைப்படுத்த யாராலும் முடியாது. உலக நாடுகள் சந்திக்கும் சவாலை தான், இந்தியாவும் சந்தித்து வருகிறது. கச்சா எண்ணெய் விலை உயரும் போது, பொருளாதாரம் பாதிக்கிறது. டாலர் பலப்படும்போது, இந்திய ரூபாயில் வீழ்ச்சி காணப்படுகிறது. 2008 சர்வதேச பொருளாதார நிலை இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. உலகளவில் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது என ஜேட்லி கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: