ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்க தயார்: தமிழக அரசு

மதுரை: ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரன், முறையான காரணங்களுடன் விண்ணப்பித்தால் பரோல் வழங்க தயாராக இருப்பதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ரவிச்சந்திரனின் தாயார் ராஜேஷ்வரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தமக்கு வயதாகிவிட்டதால் மகனின் உதவி தேவைப்படுவதாக கூறியுள்ளார். ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரின் விடுதலை ஆளுநர் முடிவுக்காக காத்திருப்பதால் காலதாமதமாகி வருவதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் மகன் ரவிச்சந்திரனுக்கு நீண்ட கால பரோல் வழங்க வேண்டும் என்று ராஜேஷ்வரி கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனு இன்று நீதிபதிகள் கருப்பையா மற்றும் புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை விவகாரம், ஆளுநரின் முடிவுக்காக காத்திருப்பில் உள்ளதாக கூறியனார். இந்நிலையில் நீண்ட விடுப்பு கோரினால் சிக்கல் உள்ளதாகவும், முறையான காரணங்களுடன் விண்ணப்பித்தால் 10 நாட்கள் பரோல் வழங்க தயாராக இருப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: