ரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி - மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அறிவிப்பு

போபால்: மத்தியப்பிரதேசத்தில் விவசாயிகளின் ரூ.2 லட்சம் வரையிலான கடனை தள்ளுபடி செய்யும் கோப்பில் முதல்வர் கமல்நாத் கையெழுத்திட்டுள்ளார். மத்தியப்பிரதேச முதல்வராக பதவியேற்ற பின் முதல் கோப்பில் கமல்நாத் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின் போதே மக்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சி விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்வதாக வாக்குறுதியை முன்வைத்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார்கள். இது பல்வேறு தளங்களில் சர்ச்சைகளையும், விவாதங்களையும் எழுப்பியது. பிரதமர் மோடி கூட இது சாத்தியம் இல்லாதது என கூறினார். காங்கிரசின் இந்த பரப்புரை பொய்யானது என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

தற்போது அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பதவியேற்ற பின் முதல் கோப்பில் கமல்நாத்  விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்து கையெழுத்திட்டிருக்கிறார். 2லட்சம் ரூபாய் மதிப்பிலான விவசாயிகள் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளார். இதேபோல சத்திஸ்கர், ராஜஸ்தானிலும் இதே போன்ற நடவடிக்கைகளை அம்மாநில முதல்வர்கள் மேற்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்த போது 2 லட்சம் மதிப்பிலான கடனை நாங்கள் தள்ளுபடி செய்திருக்கிறோம், ஆனால் தற்போது மத்தியில் இருக்கக்கூடிய மோடி அரசு கார்ப்ரைட்  நிறுவனங்களின் பல லட்சம் மதிப்பிலான கடனை தள்ளுபடி செய்யும் போது ஏன் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யக்கூடாது என்று தொடர்ந்து கருத்துக்களை முன்வைத்து வருகிறது.

அதற்க்கு மத்திய அரசின் சார்பில் விவசாய கடன் தள்ளுபடி என்பது சிறந்த தீர்வாக இருக்காது என்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த சூழ்நிலையில் தற்போது விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்திருப்பது பெரும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாக பார்க்கப்படுகிறது.  இதனால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: