விமானத்தில் வந்து சென்னையில் கைவரிசை பிரபல ஆந்திர கொள்ளையன் கைது

சென்னை: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் திருட்டு வழக்கு ஒன்றில் சத்ய ரெட்டி (26) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், சத்ய ரெட்டி மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னையில் என நாடு முழுவதும் 56 திருட்டு வழக்குகளில் தொடர்புள்ளவர் என தெரியவந்துள்ளது. மேலும், விமானம் மூலம் சென்னைக்கு வந்து, கடந்த ஜூன் 27ம் ேததி  நுங்கம்பாக்கத்தில் டாக்டர் கவுசிக் வீட்டில் 30 லட்சம் மதிப்புள்ள தங்க, வைர நகைகளை கொள்ளையடித்தது. தி.நகரில் ஓய்வுபெற்ற அரசு டாக்டர் பாலகுமார் வீட்டில் கடந்த அக்டோபர் 22ம் ேததி 15 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்தது, தேனாம்பேட்டையில் தொழிலதிபர் வீட்டில் பல லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து ஆந்திர போலீசார் சென்னை போலீஸ் கமிஷனருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் முத்துவேல் பாண்டியன் தலைமையிலான போலீசார் கடந்த 28ம் தேதி விசாகப்பட்டினத்திற்கு சென்றனர். அங்கு கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் அனைத்தையும் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆனால் குற்றவாளி சத்ய ரெட்டி மற்றும் அவரது கூட்டாளி நரேந்திர நாயக் ஆகியோரை பல நடைமுறை சிக்கல்கள் இருந்ததால் உடன் அழைத்து வர முடியவில்லை. இதற்கிடையே மீண்டும் கடந்த 10ம் தேதி உதவி கமிஷனர் முத்துவேல் பாண்டியன் தலைமையிலான தனிப்படையினர் விசாகப்பட்டினத்திற்கு ெசன்று பிரபல கொள்ளையன் சத்ய ரெட்டி, நரேந்திர நாயக் ஆகியோரை ேநற்று முன்தினம் இரவு ெசன்னைக்கு அழைத்து வந்தனர். பின்னர் இருவரிடமும் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அதை தொடர்ந்து குற்றவாளிகள் இருவரையும் போலீசார் ேநற்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: