இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கூகுள் மேப் உதவியுடன் கொள்ளையடித்த இரண்டு பேர் கைது

சென்னை: இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் கூகுள் மேப் உதவியுடன் செல்வந்தர்களின் வீடுகளை தேடிக்  கொள்ளை அடித்த கொள்ளையர்கள் இருவரை சென்னை போலீசார் கைது செய்து அழைத்து வந்துள்ளனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் அப்போலோ மருத்துவமனை மருத்துவர் வீட்டில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. அதே போல் தேனாம்பேட்டை, வள்ளுவர் கோட்டம் ஆகிய பகுதிகளிலும் செல்வந்தர்கள் வீடுகளில் கொள்ளை அரங்கேறி உள்ளது. இந்த நிலையில் வேறொரு கொள்ளை வழக்கில் ஆந்திராவைச் சேர்ந்த சத்யரெட்டி என்பவனை கடந்த 1ஆம் தேதி தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் வடக்கு மண்டல போலீசார் கைது செய்து கோடிக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர நகைகள் மீட்கப்பட்டன.  

அவனிடம் நடத்திய விசாரணையில் சென்னை கொள்ளைக்கும் அவனுக்கும் தொடர்பிருப்பதாக போலீசார் கூறியுள்ளனர்.

முதலில் கூகுள் மேப் மூலம் சென்னையில் செல்வந்தர்கள் அதிகம் வசிக்கும் பகுதியை தேடி பின்னர் ஆந்திராவில் இருந்து விமானம் மூலம் சென்னை வரும் கொள்ளையன் ஆட்டோவில் சென்று வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையை அரங்கேற்றியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தெலுங்கானா மாநில சிறையில் அடைக்கப்பட்டிருந்த சத்ய ரெட்டி மற்றும் அவனது கூட்டாளி நாராயண குரு ஆகிய இருவரையும் நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் முத்துவேல் பாண்டி தலைமையிலான தனிப்படையினர் ஐதராபாத் சென்று காவலில் எடுத்து அழைத்து வந்துள்ளனர். சத்யரெட்டியிடம் இருந்து 120 சவரன் நகைகள் மீட்கப்பட்டுள்ளார். நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து தமிழகத்தில் நடந்த மற்ற கொள்ளை வழக்குகளிலும் இவர்களின் தொடர்பு குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து எழும்பூர் நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்தியுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: