கர்நாடகத்தை எந்த இடத்திலும் அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் : அமைச்சர் காமராஜ்

திருவாரூர்: மேகதாது மட்டுமின்றி எந்த இடத்திலும் தமிழக அரசின் அனுமதியின்றி கர்நாடக அரசை புதிய அணை கட்ட விடமாட்டோம் என்பதில் தமிழக அரசு உறுதிடியாக உள்ளதாக அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். திருவாரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மிதிவண்டி வழங்கும் விழாவில் பங்கேற்ற தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ், மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். மாவட்டம் முழுவதும் 22 ஆயிரத்து 710 மிதிவண்டிகளில் மாணவ மாணவிகளுக்கு வழங்க உள்ள நிலையில், முதற்கட்டமாக ஐயாயிரத்து 850 மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.

விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கஜா புயலால் ஏற்பட்ட சேதங்களின் கணக்கெடுப்புகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருப்பதாக கூறினார். வீடுகளை இழந்தவர்கள், வீடுகள் சேதமடைந்தவர்களுக்கு  நிவாரண உதவித்தொகை அவரவர் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருவதாக கூறினார். தமிழக அரசுக்கு நிவாரண நிதியாக 15 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கும் கோரிக்கையை மத்திய அரசு  பரிசீலிக்க வேண்டும். மேகதாது அணை மட்டுமல்ல , எந்த இடத்திலும் புதிய அணை கட்ட கர்நாடகத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்காது என்றார்.

 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: