தாம்பரம் ரயில் நிலையத்தில் பேட்டரி ஆட்டோ அறிமுகம்: முதியோர் இலவசமாக பயணிக்கலாம்

தாம்பரம்: தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக பேட்டரி ஆட்டோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை தென்னக ரயில்வே பொதுமேலாளர் மற்றும் தென்னக ரயில்வே பெண்கள் நல அமைப்பு தலைவர் தொடக்கி வைத்தனர். தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக ரயில்வே தெற்கு பெண்கள் நல தலைமையகம் அமைப்பின் சார்பில் தாம்பரம் ரயில் நிலையத்தில் பேட்டரியால் இயங்கும் ஆட்டோக்களை அறிமுகம் செய்யும் விழா தாம்பரம் ரயில் நிலையத்தில் நேற்று காலை நடைபெற்றது.  இதில் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் குலசிரேஷ்தா மற்றும் தெற்கு ரயில்வே பெண்கள் நல தலைமையகம் அமைப்பின் தலைவர் மான்சி குலசிரேஷ்தா கலந்து கொண்டு பேட்டரி ஆட்டோக்களை துவங்கி வைத்தனர்.

இதுகுறித்து தெற்கு ரயில்வே பொதுமேலாளர் குலசிரேஷ்தா கூறுகையில், ‘‘தாம்பரம் ரயில் நிலையத்தில் முதல் முறையாக பயணிகள் ரயிலில் ஏற பேட்டரியால் இயங்கும் ஆட்டோக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பயணிகள் பயன்பாட்டிற்காக இந்த சேவையை தெற்கு ரயில்வே பெண்கள் நல தலைமையகம் அமைப்பு செய்துள்ளது. இந்த வசதியை ஏற்க்கனவே சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில்நிலையங்களில் செய்துள்ளோம். இதேபோல மற்ற புறநகர் ரயில்நிலையங்களில் இந்த வசதிகளை கொண்டுவரவுள்ளோம். இந்த சேவையை பொதுமக்கள் சரியாக பராமரிக்கவும், பாதுகாப்பாக உபயோகப்படுத்தவும் வேண்டும். இதை முதியோர், மாற்றுத்திறனாளிகள் இலவசமாக பயன்படுத்தலாம்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: