வங்கி துறையின் மீது தான் முதல் கவனம் செலுத்த உள்ளேன் : சக்திகாந்த தாஸ் பேட்டி

மும்பை: ரிசர்வ் வங்கியின் 25-வது ஆளுநராக சக்தி காந்த தாஸ் இன்று பதவியேற்று கொண்ட நிலையில், மும்பையில் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசினார். அப்போது பேசிய அவர் . வங்கி துறையின் மீது தான் முதல் கவனம் செலுத்த உள்ளதாக குறிப்பிட்டார். பல்வேறு சவால்கள் உள்ளடங்கிய வங்கி துறையை மேம்படுத்த வேண்டியுள்ளது. ரிசர்வ் வங்கியின் சுயாட்சி, நம்பகத்தன்மையை உறுதி செய்வேன் என கூறிய அவர், நமது பொருளாதாரத்தில் வங்கி துறை முக்கிய பங்கு வகிப்பதாக கூறினார். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் ரிசர்வ் வங்கி முக்கிய கவனம் செலுத்தும் என்றார்

பொதுத்துறை வங்கி மேலாண் இயக்குநர்கள், தலைமை செயலதிகாரிகள் உள்ளிட்டோருடன் நாளை முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக கூறினார். நாளை மறுநாள் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் குழுவுடன் ஆலோசிக்க உள்ளதாக குறிப்பிட்டார். மேலும் பேசிய அவர் மத்திய அரசுக்கும் - ரிசர்வ் வங்கிக்கும் இடையே நடைபெற்ற முந்தைய விவகாரங்கள் குறித்து தம்மால் கருத்து ஏதும் தெரிவிக்க இயலாது என்றார். RBI-க்கு மத்திய அரசுடன் நெருடல் உள்ளதாக கூறப்படுவது பற்றியும் தமக்கு தெரியாது என்றார். பேச்சுவார்த்தை மூலமே அனைத்து பிரச்சனைகளுக்கும் தீ்ர்வு காணமுடியும் என நம்புவதாக கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: