சென்னை அண்ணா அறிவாலயத்தில் 114 அடி உயர கம்பத்தில் திமுக கொடியை ஏற்றினார் ஸ்டாலின்

சென்னை: அண்ணா அறிவாலயத்தில் 114 அடி உயர கம்பத்தில் திமுக கொடியை மு.க.ஸ்டாலின் ஏற்றியுள்ளார். இந்தியாவிலேயே அரசியல் கட்சி தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்ட மிக உயரமான கொடி கம்பம் இதுவாகும். 20 அடி நீளம், 30 அடி அகலத்தில் தயாரிக்கப்பட்ட கொடி மோட்டார் மூலம் ஏற்றப்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்திய அரசியல் கட்சிகளிலே தலைமை அலுவலகத்தில் உயரமான கொடிமரத்தை கொண்ட பெருமையை திமுக பெறுகிறது. மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் முழு உருவச்சிலை அண்ணா அறிவாலயத்தில் வருகிற 16-ந் தேதி திறக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய அளவில் அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். இதையொட்டி பிரமாண்டமான கொடிக் கம்பம் அறிவாலய வளாகத்தில் நடப்பட்டுள்ளது

சென்னையின் இதய பகுதியாய் கருதப்படும் அண்ணாசாலையில் அமைந்துள்ள திமுக தலைமைகழகமான அண்ணா அறிவாலயத்தில், நிறுவப்பட்டுள்ள பிரம்மாண்ட இரும்பினாலான கொடி மரம் 2430 கிலோ எடை கொண்டது. பிரம்மாண்ட இந்த கொடி மரத்தில் 20அடி நீளம் 30அடி அகலம் வெல்வெட் துணியால் தயாரிக்கபட்ட கொடி மோட்டார் மூலம் ஏற்றப்பட்டது. கொடி உச்சியில் நின்று பறப்பதற்கு 11 நிமிடங்கள் ஆகும் கூறப்படுகிறது. இந்த கொடி காற்றில் கிழியாதபடி ‘லேமினேட்’ முறையில் தயாரிக்கப்பட்டது. 6 மாதம் வரை பளபளப்பாக இருக்கும். அதன்பிறகு மீண்டும் புது கொடி மாற்றப்படும். வாகா எல்லையில் 320அடி உயரம் தேசிய கொடி மரத்தை நிறுவிய நிறுவனத்திடம் திமுக கொடி மரம் அமைக்கும் பணி ஒப்படைக்கபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: