ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தனது பதவியை ராஜினாமா செய்தார்

மும்பை : ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் தனது பதவியை ராஜினாமா செய்தார். சொந்த காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்து கொள்வதாக உர்ஜித் படேல் அறிவித்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4ம் தேதி ரிசர்வ் வங்கி ஆளுநராக உர்ஜித் படேல் பதவி ஏற்று கொண்டார். உபரியாக உள்ள பணம் தொடர்பாக மத்திய அரசு - ரிசர்வ் வங்கி இடையே கருத்து வேறுபாடு நீடித்து வந்தது. ரிசர்வ் வங்கியின் உபரி பணத்தை சந்தையில் திருப்பிவிட மத்திய அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இதற்கு மத்திய அரசின் கோரிக்கைக்கு ரிசர்வ் வங்கி எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

மத்திய அரசு - ரிசர்வ் வங்கி மோதல்

மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே அவ்வப்போது மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. ரகுராம் ராஜன் பதவி வகித்த காலத்தில் இருந்தே இதே நிலைதான் காணப்பட்டது. ரகுராம் ராஜனுக்கு பிறகு உர்ஜித் படேல் 24வது கவர்னரானார். இவர் கென்யாவில் பிறந்தவர். இவரது பெற்றோர் குஜராத்தை சேர்ந்தவர்கள். கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் 4ம் தேதி இவரை மத்திய அரசு பதவியில் அமர்த்தியபோது, குஜராத்தை சேர்ந்தவர் என்பதால் இந்த பதவி கிடைத்ததாக விமர்சனங்கள் எழுந்தது. ஆனாலும், மோதல் தொடர்ந்தது.

மோதலை வெட்ட வெளிச்சமாக்கும் வகையில் ரிசர்வ் வங்கி துணை கவர்னர் விரால் ஆசார்யாரிசர்வ் வங்கியின் முடிவுகள், செயல்பாடுகளில் மத்திய அரசு தலையிடுகிறது. ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தை  மத்திய அரசு மதிப்பதில்லை என்றார். மத்திய அரசுடனான மோதல் போக்கு உச்சகட்டம் அடைந்த நிலையில், ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. எனினும் உர்ஜிட் படேல் ராஜினாமா செய்வதற்காக அறிகுறிகள் இல்லை என்றும் சில வட்டாரங்கள் மறுத்தன.

ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா

இந்நிலையில் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் . தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக ராஜினாமா கடிதத்தில் உர்ஜித் பட்டேல் விளக்கம் அளித்துள்ளார்.எனினும் மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே மோதல் உச்சகட்டத்தை எட்டியதால், ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக நாடாளுமன்ற குழு முன்பு ஆஜரான உர்ஜித் படேல், மத்திய அரசுக்கு நிதி அளிப்பதில் சர்ச்சை இல்லை எனக் கூறியிருந்தார்.

ராஜினாமா எதிரொலி : கருத்துகளும் குற்றச்சாட்டுகளும்

ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி அதிகாரத்தை மத்திய அரசு சீர்குலைத்து விட்டது என்று யஷ்வந்த் சின்ஹா குற்றச்சாட்டுகிறார். மேலும் ரிசர்வ் வங்கி ஆளுநர் ராஜினாமாவால் சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்புல் பாதிப்பு ஏற்படும் என்று பொருளாதார பேராசிரியர் ஜோதி சிவஞானம் கருத்து தெரிவித்துள்ளார். உர்ஜித் படேலின் ராஜினாமா எதிர்பார்த்த ஒன்றுதான் என்றும் இதனால் இந்திய ரூபாயின் மதிப்பு சரிய வாய்ப்பு இருக்கிறது என்றும் முன்னாள் எம்.பி. சுதர்சன நாச்சியப்பன்

கருத்து தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: