வாடிக்கையாளர்களின் பட்ஜெட்டுக்கு தக்கவாறு சிறந்த தேர்வை அளிக்கும் விதத்தில், மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவி ரக எஸ்-9 என்ற புதிய வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. எஸ்-11 என்ற டாப் வேரியண்ட்டுக்கு கீழாக இந்த கார் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இப்புதிய வேரியண்ட்டில் கார்னரிங் ஹெட்லைட் வசதியுடன்கூடிய புரொஜெக்டர் ஹெட்லைட் பொருத்தப்பட்டுள்ளது. எல்இடி கெய்டு லைட், ஹைட்ராலிக் சிஸ்டத்தில் திறக்கும் பானட், டர்ன் இண்டிகேட்டர் பொருத்தப்பட்ட சைடு மிரர், ரிவர்ஸ் பார்க்கிங் அசிஸ்ட் சிஸ்டம் போன்ற பல வசதிகள் இடம்பெற்றுள்ளது. உட்புறத்தில் 5.9 அங்குல தொடுதிரையுடன்கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம், 10 மொழிகளில் தகவல்களை தரும் ஜிபிஎஸ் நேவிகேஷன் சிஸ்டம், வாய்ஸ் அசிஸ்ட் சிஸ்டம், முழுமையான தானியங்கி வெப்பநிலை கட்டுப்படுத்தும் வசதி, க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்ச்களுடன்கூடிய ஸ்டீயரிங் வீல் ஆகியவை முக்கிய வசதிகளாக உள்ளன.
