திருக்காட்டுப்பள்ளி ஸ்ரீஅக்னீஸ்வரருக்கு “அயுதநாமாவளி” அர்ச்சனை

திருக்காட்டுப்பள்ளி: தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி சவுந்தரநாயகி அம்பாள் சமேத ஸ்ரீஅக்னீஸ்வரருக்கு மகாதேவ அஷ்டமியை முன்னிட்டு நேற்று  “சாம்ப சதாசிவ அயுதநாமாவளி” எனப்படும் 10ஆயிரம் அர்ச்சனை செய்து சிறப்பு வழிபாடு நடந்தது. வழக்கமாக சிவ பெருமானுக்கு 18 அர்ச்சனை அஷ்டோத்திர நாமாவளி என்றும், 108 அர்ச்சனை சதநாமாவளி என்றும், 1008 அர்ச்சனை சகஸ்ரநாமாவளி என்றும் அர்ச்சனைகள் செய்யப்பட்டு வருகிறது.

தஞ்சை தேவி உபாசகர் நிவாசசர்மா தஞ்சை சரஸ்வதி மஹாலில் உள்ள பழைய கையெழுத்து படிவங்களில் தெலுங்கு மொழியில் சிவபெருமானுக்கு “சாம்ப சதாசிவ அயுதநாமாவளி” என்ற பெயரில் 10ஆயிரம் அர்ச்சனைகள் உள்ளதை பார்த்து, அதனை தமிழில் மொழிபெயர்த்து அளித்தார்.hஇதனை கடந்த 14 ஆண்டுகளாக பக்தர்கள் திருக்காட்டுப்பள்ளி ஸ்ரீஅக்னீஸ்வரருக்கு மகாதேவ அஷ்டமியில் நடத்தி சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். இந்த வருடம் (15ம் ஆண்டு) அக்னீஸ்வரருக்கு இச்சிறப்பு வழிபாடும், அர்ச்சனையும் நேற்று நடந்தது.

காலை 8 மணிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. பின்னர் 9 மணிக்கு தொடங்கி  10 ஆயிரம் அர்ச்சனைகள் வில்வம் மற்றும் புஷ்பங்களால் செய்யப்பட்டு மதியம் 1 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. ஸ்ரீசவுந்தரநாயகி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்று தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில் கோயில் பங்குனி உத்திர கமிட்டி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, பொறியாளர் சிவகுமார், சிவாச்சாரியார்கள் குமார், விவேகானந்தன், விக்னேஷ் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: