சென்னை: தமிழக அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சுனீல் பாலீவால் வெளியிட்ட அறிவிப்பு: ஐக்கிய அரபு நாட்டிலுள்ள ஷார்ஜாவில் ஒரு முன்னணி நிறுவனத்தில் பணிபுரிய டிப்ளமோ மெக்கானிக் தேர்ச்சி பெற்ற மேற்பார்வையாளர்கள், பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ படித்த Steel Structural Fabricator, Radiographic Quality 4G Arc, MIG Welders, CNC Plasma, CNC laser Machine இயக்குபவர்கள் மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஐக்கிய அரபு நாட்டின் செல்லத்தக்க லைட் டுயூட்டி டிரைவர் மற்றும் பஸ் டிரைவர் உரிமம் உள்ள ஓட்டுநர்கள் தேவைப்படுகிறார்கள். இந்த பணிகளுக்கு 1ம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு நேர்காணல் நடைபெறும். மேலும் டிப்ளமோ மெக்கானிக் தேர்ச்சி பெற்ற QA/QC ஆய்வாளர்கள், மற்றும் டாக்குமேன்டேசன் கன்ட்ரோலர்ஸ், பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ படித்த சிஎன்சி புரோகிராமர், லேத் மிஷின் இயக்குபவர்கள், ஆட்டோமேசன் கன்ட்ரோல் & இன்ஸ்டிடியூமேன்சன் டெக்னீசியன், தொழிற்சாலைகளில் பணிபுரிந்த எலக்ட்ரீசியன் மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஒர்க்ஷாப் மெயின்டென்ஸ் மெக்கானிக், ஆட்டோ மெட்டிக் வித் டீசல் இன்ஜின் அனுபவம் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிந்த அனுபவமுள்ள ஸ்டோர் கீப்பர்கள் தேவைப்படுகிறார்கள். இந்த பணிகளுக்கு 2ம் தேதி காலை 9 மணிக்கு நேர்காணல் நடைபெறும்.