கஜா புயல் பாதித்த மாவட்ட கிராமபுறங்களில் ஒரு வாரத்தில் மின் விநியோகம் சீராகும்: அமைச்சர் தங்கமணி

நாகை: கஜா புயல் பாதித்த மாவட்ட கிராமபுறங்களில் மின் விநியோகம் சீராக ஒரு வாரக் காலம் ஆகும் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நகர்ப்புறங்களில் இன்றைக்குள் முழுமையாக மின்விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நாகை மாவட்டம் கீழையூரை அடுத்த காமேஸ்வரபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கஜா புயலால் நாகை மாவட்டத்தில் 25,000 மின்கம்பங்கள் உட்பட புயல் பாதித்த மாவட்டங்களில் 1 லட்சம் மின்கம்பங்கள் சேதமடைந்ததாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து, புயல் பாதித்த 5 மாவட்டங்களில் 21,461 மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாக அவர் கூறினார். முன்கூட்டியே தேவையான மின்கம்பங்கள் வைக்கப்பட்டிருந்தாலும் சேதம் அதிக அளவில் உள்ளதால், ஆந்திர அரசிடம் மின்கம்பங்கள் கேட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து நகர் புறங்களில் 75% மின் பாதிப்புகள் சீரமைக்கப்பட்டுவிட்டதாகவும், எஞ்சியவற்றை இன்றைக்குள் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். மேலும் ஊரக பகுதிகளில் வயல் வெளிகளில் மின்சாதனகளை கொண்டு செல்ல போக்குவரத்து வசதியை பயன்படுத்த முடியாது என்பதால், இன்னும் ஒரு வாரத்திற்குள் மின் இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். இதனை தொடர்ந்து, விவசாயத்திற்கான மின் இணைப்பு 10 நாட்களில் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதை தவிர, தஞ்சையில் 100%, திருவாரூர், கூத்தாநல்லூர், புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் 50%, பட்டுக்கோட்டையில் 20% அளவிற்கு மின் விநியோகம் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: