கேரள காங்கிரஸ் எம்பி எம்.ஐ.ஷானவாஸ் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்

சென்னை: கேரள மாநில காங்கிரஸ் எம்பி எம்.ஐ.ஷானவாஸ் சென்னையில் காலமானார். கேரள மாநில காங்கிரஸ் வயநாடு மக்களவை தொகுதி எம்பியும், மாநில காங்கிரஸ் செயல் தலைவராமாக எம்.ஐ.ஷானவாஸ் இருந்து வந்தார். 67 வயது மிக்க எம்.ஐ ஷனவாஸ் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி எம்.ஐ ஷனவாஸ் உயிரிழந்தார். எம்.ஐ ஷனவாஸ் மறைவிற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். எம்.ஐ ஷனவாஸ் மறைவு கேரள காங்கிரஸ் கட்சிக்கு பெரிய இழப்பாக கருதப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: