பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரம் சந்தானம் குழு அறிக்கையை வெளியிட அனுமதிக்க வேண்டும்: ஐகோர்ட்டில் அரசு தரப்பு வாதம்

சென்னை:  மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்ததாக கைது செய்யப்பட்ட அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மீதான வழக்கை பெண் டி.ஐ.ஜி. தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டுமென புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் வழக்கு தொடர்ந்திருந்தார்.  ஏற்கனவே, இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பல்கலைக்கழகங்களின் வேந்தர் நியமித்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் குழு அளித்த அறிக்கையை வெளியிட தடைவிதித்துள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.  

அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான வக்கீல், உண்மை வெளியாக வேண்டுமென்றால் சந்தானம் குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும். எனவே, அறிக்கையை வெளியிட விதித்த தடையை நீக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது. மனுதாரர் தரப்பில்,  விசாரணையை சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்ற வேண்டுமென்று வாதிடப்பட்டது.  அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், விசாரணையை எப்படி நிறுத்த முடியும்? குற்றச்சாட்டு குறித்து உண்மையை கண்டறிய ஆரம்பகட்ட விசாரணை நடத்த ஆளுநர் அலுவலகத்துக்கு உரிமையில்லையா? என்று கேள்வி எழுப்பினர்.   மேலும், மாணவிகளின் பெயர்கள் வெளியிடப்பட்டது தொடர்பாக மனுதாரர் தரப்பு கூடுதல் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு   விசாரணையை வரும் 26ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: