மெரினா காமராஜர் சாலையில் சீறிப் பாய்ந்த மாஜி துணை வேந்தர் காரால் விபத்தில் சிக்கிய மாநகர பேருந்து

சென்னை: சீறிப் பாய்ந்த முன்னாள் துணை வேந்தர் ஒருவரின் சொகுசு காரால் மாநகர பேருந்து நடைபாதையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்த 40 பயணிகள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அறிஞர் அண்ணாநகரை சேர்ந்தவர் முகுந்தன் (41). மாநகர போக்குவரத்து கழக பல்லவன் இல்லம் பணிமனையில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். நேற்று மதியம் 1.15 மணிக்கு பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து திருப்போரூர் (நோக்கி த.எண்.109 எஸ்) மாநகர பேருந்தை ஓட்டி சென்றார். இதில், 40 பயணிகள் இருந்தனர். பேருந்து மெரினா காமராஜர் சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லம் அருகே வரும் போது, முன்னால் சென்று கொண்டிருந்த சொகுசு கார் ஒன்று  வலது பக்கத்தில் இருந்து திடீரென அசுர வேகத்தில் சாலையின் இடது பக்கமாக மாநகர பேருந்தை அனைத்தப்படி சென்றது.

Advertising
Advertising

அப்போது, கார் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் முகுந்தன் பேருந்தை இடது பக்கமாக திருப்பினார். அதில் பேருந்து காமராஜர் சாலையில் உள்ள நடைபாதை தடுப்பு சுவர் மீது பயங்கர வேகத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் படுகாயமடைந்தார். பேருந்தில் பயணம் ெசய்த 40க்கும் மேற்பட்ட பயணிகள் சிறு காயங்களுடன் உயிர்தப்பினர். விபத்தில் பேருந்தின் முன் பக்கமும், சொகுசு காரின் பின் பக்கம் லேசாக சேதமடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயமடைந்த ஓட்டுனரை மீட்டு ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.  பின்னர் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், விபத்துக்கு காரணமாக சொகுசு கார் சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் தாண்டவன் கார் என தெரியவந்தது. அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டியதாக கொடுங்கையூர் பாடி அம்மன் கோவில் 3வது தெருவை சேர்ந்த கார் டிரைவர் செல்வரசு (43) என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: