நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்துக்கும் தேர்தலா? பொன்.ராதாகிருஷ்ணன் பதில்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலோடு, தமிழக சட்டசபைக்கும் தேர்தல் நடக்கும் என்று எதிர்கட்சிகள் நினைத்து கொண்டு இருப்பது ‘இலவு காத்த கிளி’யை போல் முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.  மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று பிற்பகல் 1.30 மணி விமானத்தில் மதுரையில் இருந்து சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:‘கஜா’ புயல் தாக்கத்தை எதிர்கொள்ள அனைத்துவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் சிறந்த முறையில் செய்து முடிக்கப்பட்டுள்ளது என்று மாநில அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசை பொறுத்தவரையில் அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாநில அரசுக்கு செய்யும்.

தமிழகத்தில் நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலோடு தமிழக சட்டசபைக்கும் தேர்தல் நடக்கும் என்று எதிர்கட்சிகள் நினைத்துக் கொண்டு இருப்பது ‘இலவு காத்த கிளி’யை போல் முடியும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வுக்கும், மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தேர்தலுக்காக இப்போது பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக எதிர்கட்சிகள் கூறுகின்றன. அதை வாதத்திற்கு ஏற்றுக்கொண்டால் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில், தேர்தலுக்காக மத்திய அரசு உயர்த்துகிறதா?

இதில் இருந்தே ஒன்றை தெரிந்து கொள்ளவேண்டும். இந்த விலை உயர்வு, விலை குறைப்பு எதுவும் மத்திய அரசின் கையில் இல்லை. சர்வதேச சந்தையின் நிலவரத்திற்கு தகுந்தாற்போல் அவ்வப்போது விலை உயர்கிறது, விலை குறைகிறது. இதில் மத்திய அரசு எதுவும் செய்வதற்கு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: