நாகை, வேதாரண்யம் இடையே கஜா புயல் கரையைக் கடக்க தொடங்கியது : வானிலை மையம்

சென்னை: நாகை, வேதாரண்யம் இடையே கஜா புயல் முன்பகுதி கரையை கடக்க தொடங்கியுள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்க தொடங்கியதால் நாகை, வேதாரண்யத்தில் 110 கிமீ வேகத்தில் காற்று வீசுகிறது. காரைக்காலில் இருந்து 80 கி.மீ. தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளதாகவும், வேதாரண்யத்தில் இருந்து 60 கி.மீ. தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சிறிது நேரத்தில் புயலின் மையபகுதி கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றின் வேகம் அதிகரிப்பு

நாகையில் கனமழை பெய்து வரும் நிலையில் காற்றின் வேகம் தொடர்ந்து அதிகரித்து கொண்டு இருக்கிறது. புயல் கரையை நெருங்கும் நிலையில் அதிக சத்தத்துடன் காற்று வீசி வருகிறது.

மின் இணைப்பு துண்டிப்பு

தஞ்சை மாவட்டத்தில் 25 கடலோர கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் நாகை, ராமநாதபுரம், ராமேஸ்வரம், பாம்பன் உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்டம் முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

67,000 பேர் முகாம்களில் தங்க வாய்ப்பு

கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 347 முகாம்களில் 67,000 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடலூர் 10,420, நாகை 44,087, ராமநாதபுரம் - 913, தஞ்சை 4,678, புதுக்கோட்டை 1,881, திருவாரூர் 5189 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: