கஜா புயலால் உயிரிழப்பு ஏற்படாமல் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை: ஆர்.பி.உதயகுமார் பேட்டி

சென்னை: கஜா புயலால் உயிரிழப்பு ஏற்படாமல் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பயப்பட தேவையில்லை என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். சென்னையில் பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள பேரிடர் மையத்தை தொடங்கிவைத்த பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இவ்வாறு கூறியுள்ளார். மேலும் நாகையில் புயல் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள தொடங்கப்பட்ட பேரிடர் மையத்தின் முக்கியத்துவம்

* பேரிடர் காலங்களில் தகவல் பரிமாற்றம் என்பது மிக முக்கிய செயல் என்பதால் பேரிடர் பாதிப்புகளுக்கு உள்ளாகும் மக்களுக்கு உரிய காலத்தில் எச்சரிக்கை தகவல்களை தெரிவிக்கும் வகையில் முன்னெச்சரிக்கை தகவல் அறிவிப்பு அமைப்புகள் கடலோர அபாய பேரிடர் அமைப்பு திட்டத்தின் கீழ் நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது.

* பேரிடர் காலங்களில் இதனுடைய நோக்கம் ஆபத்து நெருங்குவதற்கு முன்பாக பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் வசித்துவரும் ஆண்கள், பெண்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள், இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோருக்கு உரிய எச்சரிக்கை, தகவல்கள் அனுப்பப்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற செய்து  உயிரிழப்பு இல்லாத நிலையை காப்பதே இந்த அமைப்பின் முக்கிய நோக்கம் என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

* இந்த அமைப்பானது இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் இந்திய கடல் சார் மையங்களில் இருந்து நமக்கு தரப்படும் எச்சரிக்கைகளை ஒளி அலைகள் மூலம் சைரன் டோன் மூலம் மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டு ஆட்சியர் தலைமையில் அறிவிக்கப்படும்.

* இந்த அமைப்பின் சிறப்பு அம்சமாக பேரிடரில் பாதிக்கப்படும் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் பிரத்தியோக அவசர தகவலை மென்பொருள் மூலம் தேர்வு செய்து அனுப்ப இயலும் எனவும் அவர் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: