கொள்ளிடம் ஆற்று பாதைகளில் பள்ளம் மணல் திருட்டு தடுக்க அதிரடி திட்டம்

கொள்ளிடம்: நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராமங்களில் இரவு நேரங்களில் தொடர்ந்து வாகனங்கள் மூலம் மணல் திருட்டு நடந்து வந்தது. கடந்த 1 மாத காலத்தில் அனுமதியின்றி மணல் கடத்தி வந்த 25க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 20க்கும் மேற்பட்டோர் கொள்ளிடம் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இருந்தும் இரவு நேரங்களில் மணல் திருடுவது தொடர் கதையாகவே இருந்து வந்தது. பொதுப்பணித்துறையினர் வருவாய் துறையினர், வனத்துறையினர் மற்றும் போலீசார் பலமுறை எச்சரித்தும் மணல் திருட்டை தடுக்க முடியவில்லை. நேற்று பொதுப்பணித்துறையின் சீர்காழி உதவி செயற்பொறியாளார் ராஜேந்திரன், வருவாய் துறை அதிகாரிகள், வனத்துறை ஊழியர்கள் மற்றும் கொள்ளிடம் போலீசார் குத்தவக்கரை ரயில்வே பாலம், சந்தப்படுகை, நாதல்படுகை, முதலைமேடு திட்டு, வாடி, பட்டியமேடு,

பாலுரான்படுகை, கீரங்குடி, மாதிரவேளுர், கொன்னக்காட்டுபடுகை, சரஸ்வதிவிளாகம் உள்ளிட்ட 12 கிராமங்களில் கொள்ளிடம் ஆற்றுக்கு செல்லும் வழக்கமான பாதைகளின் குறுக்கே 20 இடங்களில் பொக்லைன் இயந்திரம் மூலம் வாகனங்கள் மணல் ஏற்ற செல்ல முடியாதபடி பள்ளம் தோண்டி தடை ஏற்படுத்தினர். பாதைகளின் குறுக்கே பள்ளம் தோண்டப்பட்டதால் இனிமேல் இரவு நேரங்களில் மணல் திருடர்கள் வாகனங்களுடன் ஆற்றுக்குள் நுழைய முடியாதபடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் மணல் திருட்டு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது என்று உதவி செயற்பொறியாளர் ராஜேந் திரன் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: