மீனாட்சி அம்மன் கோயில் சொத்துக்களை மீட்க வழக்கு: அரசுக்கு ஐகோர்ட் கிளை நோட்டீஸ்

மதுரை: மீனாட்சியம்மன் கோயில் சொத்துக்களை மீட்கக்கோரிய வழக்கில், அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘மதுரை மீனாட்சியம்மன் கோயில் மற்றும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆகியவற்றின் தர்ம காரியங்களுக்காக ஏராளமான சொத்துக்கள் தானமாக வழங்கப்பட்டது. மதுரை மாட்டுத்தாவணி பகுதியிலுள்ள சுமார் 80 ஏக்கர் நிலங்கள் பல ஆயிரம் கோடி  மதிப்புள்ளது. ஆனால், இவை உரிய அனுமதியின்றி விற்பனை செய்யப்பட்டுள்ளன. புகாரின்பேரில் இந்த நிலங்களை மீட்க குழு அமைக்கப்பட்டது.

விசாரணையில் சம்பந்தப்பட்ட நிலங்கள் கோயிலுக்கான கட்டளை சொத்துகள் என்பது உறுதி செய்யப்பட்டது. எனவே கலெக்டர் தலைமையில் குழு அமைத்து கோயிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்க உத்தரவிட வேண்டும்,’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர், வருவாய்த்துறை மற்றும் அறநிலையத்துறை கமிஷனர்கள், மதுரை கலெக்டர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை நவ. 29க்கு தள்ளி வைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: