உச்ச நீதிமன்ற நிபந்தனைகளை தளர்த்தக் கோரி சிவகாசியில் பட்டாசு ஆலை ஸ்டிரைக் துவங்கியது: 8 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழப்பு

சிவகாசி: உச்சநீதிமன்ற நிபந்தனைகளை நீக்கக்கோரி, சிவகாசி பகுதியில் 1,076 பட்டாசு ஆலைகளை மூடி உரிமையாளர்கள், ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை துவக்கி உள்ளனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசி பகுதியில் 1,076 பட்டாசு உற்பத்தி ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகள் மூலம் சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், கடந்த மாதம் 23ம் தேதி உச்சநீதிமன்றம் கடும் நிபந்தனைகளை விதித்து தீர்ப்பு வழங்கியது. அதன்படி கிரீன் பட்டாசு (பசுமை பட்டாசு) மட்டும் தயாரிக்க வேண்டும், சரவெடிகளை வெடிக்க கூடாது. பேரியம் நைட்ரேட் (பச்சை உப்பு) மூலப்பொருளை பயன்படுத்தக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக சுமார் 40% பட்டாசுகள் விற்பனையாகாமல் தேக்கமடைந்து, ஆமீர்1,500 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் சிவகாசி பட்டாசு ஆலை உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் கூடி,  உச்சநீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை தளர்த்தக்கோரி பட்டாசு ஆலைகளை மூடி, காலவரையற்ற ேவலைநிறுத்தத்தை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதனடிப்படையில், விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1,076 பட்டாசு ஆலைகளை நேற்று காலை முதல் மூடி, ஆலை உரிமையாளர்கள், ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினர். இதனால், இந்த தொழிலை நம்பியுள்ள 8 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: