கந்த சஷ்டி விழா: சிக்கல் சிங்காரவேலவர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

நாகை: சிக்கல் சிங்காரவேலவர் கோயிலில் இன்று கந்தசஷ்டி தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரிழுத்தனர்.  மாலை வேல்நெடுங்கண்ணியம்மனிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி  நடக்கிறது. முருகன் சக்திவேல் வாங்கிய நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலவர் கோயிலில் கடந்த 7ம் தேதி கணபதி ஹோமத்துடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது. அதைத்தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனத்தில் சுவாமி வீதி உலா காட்சி நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காைல கோலாகலமாக நடந்தது.  வள்ளி, தெய்வானையுடன் சிங்காரவேலவர் சுவாமி தேரில் நான்கு வீதியில் வலம் வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

 தேரோட்டத்தை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நாளை சூரசம்காரம் நடைபெறுகிறது. இதையொட்டி இன்றிரவு 7.30 மணிக்கு சிங்காரவேலவர் (முருகன்) வேல்நெடுங்கண்ணியம்மனிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அப்போது  சிங்கார வேலவர் திருமேனி எங்கும் வியர்வை ததும்பும் அற்புத காட்சி நடைபெறும். இதை காண தமிழகம் முழுவதிலும் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சிக்கலுக்கு வருவார்கள்.  இதை தொடர்ந்து நாளை (13ம் தேதி)  சிங்காரவேலர் ஆட்டுகிடா வாகனத்தில் சென்று சூரசம்ஹாரம் விழா நடைபெறுகிறது. 14ம் தேதி தெய்வசேனை திருக்கல்யாணமும், 15ம் தேதி  வள்ளித்திருமணமும் நடைபெறுகிறது. வேல் வாங்கும் நிகழ்வையொட்டி இன்று நாகை தாலுகா திருமருகல், நாகை ஒன்றியத்தில் பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டது. சிக்கலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: