விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள சர்கார் படம் பற்றிய பிரச்சனை தீர்ந்தது

சென்னை: விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள சர்கார் படம் பற்றிய பிரச்சனை தற்போது தீர்ந்துள்ளது. வழக்கம் போல எல்லா திரையரங்குகளிலும் சர்கார் படம் திரையிடப்படுகிறது. சர்கார் படத்தில் சில காட்சிகள் மற்றும் வசனங்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. விஜய் நடிப்பில் தீபாவளியன்று வெளியாகி இருக்கும் படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படம் தற்போது உள்ள அரசியல் சூழ்நிலை பற்றியும்,  கள்ள ஓட்டு பற்றியும் இயக்கி இருந்தார். இந்த படம் குறித்து நிறைய விமர்சனங்கள் வெளியாகிக் கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் சர்கார் படத்திற்கு அதிமுக போர்க்கொடி தூக்கியுள்ளது.

இதையடுத்து, தமிழகம் முழுவதும் இப்படத்தை வெளியிடப்பட்டுள்ள திரையரங்குகள் முன்பு அதிமுகவினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் திரையரங்கு முன்பு வைக்கப்பட்டிருந்த விஜய் போஸ்டர்களை அதிமுகவினர் கிழித்தனர். மேலும் ரஜினி, கமல், உள்ளட்ட நடிகர்கள் சர்கார் படத்துக்கு ஆதரவு அளித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தனர். இந்நிலையில் அதிமுகவினர் கோரிக்கையை ஏற்று படத்தில் உள்ள சில காட்சிகள் மற்றும் வசனங்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

திரையரங்கு உரிமையாளர்கள் கருத்து

சர்கார் படத்தில் சில காட்சிகள் நீக்கப்பட்டு திரையிடப்பட்டு உள்ளது என்று திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் பேட்டி அளித்தார். யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் திரையரங்குகளுக்கு இல்லை என்றுகூறினார். மேலும் சர்கார் படப்பிரச்சனை சுமுகமாக தீர்க்கப்பட்ட்டதாக அபிராமி ராமநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.காட்சிகள் நீக்கப்பட்டது பற்றி திரைப்பட தணிக்கைக்குழுவுக்கு தெரிவித்துள்ளோம் என்று தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: