சர்கார் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காசி திரையரங்கில் அதிமுகவினர் போராட்டம்

சென்னை : சர்கார் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை காசி திரையரங்கில் அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தால் கிண்டி-கோயம்பேடு சாலையில் ஜாபர்கான்பேட்டையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மதுரை, கோவையை தொடர்ந்து சர்கார் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காசி திரையரங்கில் சர்கார் பட பேனர்களை கிழித்து அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.சர்காரில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: