மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளில் முகூர்த்த வர்த்தகம்...

மும்பை : வட இந்தியாவில் தீபாவளியை முன்னிட்டு மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் நடைபெற்றது. தீபாவளியை முன்னிட்டு புதிய கணக்கு தொடங்குவதை எடுத்துக்காட்டும் விதமாக பங்குச்சந்தைகளில் முகூர்த்த வர்த்தகம் நடத்தப்படுவது வழக்கம். இது இந்த பிரத்யேக வர்த்தக நேரம் மாலை பொதுவாக மாலை நேரத்திலேயே இருக்கும். அதன்படி இன்று மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை வர்த்தகம் நடைபெறுகிறது.

இந்த முகூர்த்த நேர வர்த்தக தொடக்க நிகழ்ச்சியில் நடிகை நீது சந்திரா பங்கேற்றுள்ளார். இன்று வர்த்தகத்தில் முதலீடு செய்தால் பங்குகள் நன்கு வளர்ச்சியடையும் என்பது முதலீட்டாளர்களின் நம்பிக்கை. இந்த ஆண்டு ஜனவரி மாதம் பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டன. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 35000 புள்ளிகளைக் கடந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 10,760 புள்ளிகளை கடந்தது. கடந்த ஆண்டு ஒரு மணி நேரம் நடைபெற்ற முகூர்த்த வர்த்தகத்தின் முடிவில் நிஃப்டி 10,200 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 11 புள்ளிகள் சரிந்தது நினைவுகூரத்தக்கது.

மேலும் வட மாநிலத்தவர்களை பொறுத்தவரையில் அவர்கள் தொழில் செய்யும் இடங்களுக்கு சென்று தீபாவளி கொண்டாடுவது வழக்கம் என்று கூறப்படுகிறது. லட்சுமியை பூஜை செய்து அவர்களுக்கான ஆண்டுக்கணக்கை தொடங்கி தொழில் அடுத்தடுத்ததாக விருக்தி அடையும் என்பது அவர்களின் நம்பிக்கையாக கூறப்படுகிறது. இவர்கள் தீபாவளி பண்டிகையை 5 நாட்கள் கொண்டாடுகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: