ஐடிபிஐ வங்கியில் பெற்ற ரூ.630 கோடியை திருப்பி செலுத்தும்படி தொழில் அதிபர் சிவசங்கரனுக்கு இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவு

லண்டன் : ஐடிபிஐ வங்கியில் பெற்ற ரூ. 630 கோடியை திருப்பி செலுத்தும்படி தொழில் அதிபர் சிவசங்கரனுக்கு இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆக்செல் சன்ஷைன் லிமிடெட் (பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள்) மற்றும் விண்ட் விண்ட் ஒய் (பின்லாந்து) நிறுவனங்களுக்காக பெற்ற ரூ. 322 கோடி மற்றும் ரூ.523 கோடி கடனை முறையாக திருப்பிச் செலுத்தவில்லை என்பது சிவசங்கரன் மீது எழுந்த புகாராகும். இது தொடர்பாக வங்கி அளித்த புகாரின் பேரில் கடந்த ஏப்ரல் 13ம் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த வழக்கில் ஐடிபிஐ வங்கியின் முன்னாள் தலைவர் எம்.எஸ். ராகவன், மேலாண் இயக்குனர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி கிஷோர் கரத்,  துணை மேலாண் இயக்குனர் பி.கே.பத்ரா மற்றும் இயக்குனர்கள் பெயரும் வழக்கில் சேர்க்கப்பட்டிருந்தது.சிபிஐ விசாரணை தொடங்கிய நிலையில், சிவசங்கரன் இங்கிலாந்தில் குடியேறியதால் அந்நாட்டு நீதிமன்றத்தில் அவர் மீது ரூ. 600 கோடி கடன் மோசடி வழக்கு தொடரப்பட்டது. ஐடிபிஐ வங்கியில் பெற்ற கடன் தொகை முழுவதையும் திருப்பிச் செலுத்த சிவசங்கரன் ஒப்புக் கொண்டார். இதனையடுத்து ஐடிபிஐ வங்கிக்கு ரூ. 630 கோடியை திருப்பிச் செலுத்தும்படியும் மேலும் வழக்கு செலவுத் தொகை 26 லட்சத்தையும் கொடுக்கவும் சிவசங்கரனுக்கு இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: