மாம்பலம் காவல் நிலைய வளாகத்தில் சிசிடிவி, கட்டுப்பாட்டு அறை, 8 வடிவிலான நடைபாதை: கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் திறந்து வைத்தார்

சென்னை: சென்னை காவல்துறை சார்பில் பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகளுக்கு சிசிடிவி கேமராக்களின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு  வருகிறது.  இதன் தொடர்ச்சியாக, நேற்று காலை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விசுவநாதன் மாம்பலம் காவல் நிலைய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறை,   காத்திருப்பாளர்  அறை, 8 வடிவிலான நடைபாதையை  திறந்து வைத்து பார்வையிட்டர். இதனை தொடர்ந்து தி.நகர் காவல் மாவட்டத்தில் உள்ள 15 பீட் காவலர்களுக்கு கேமரா பொருத்தப்பட்ட அதி நவீன உபகரணங்கள் அடங்கிய ஜாக்கெட்டை   வழங்கினார்.

 இந்த கேமரா பொருத்தப்பட்டுள்ள அதி நவீன ஜாக்கெட்டில், ஜி.பி.எஸ் வசதி, அதிக  வெளிச்சம் தர கூடிய டார்ச்லைட், சுற்று காவலுக்கு தேவையான பொருட்களை வைத்துக்கொள்ள கூடிய வசதி, சுற்று காவலுக்கு உதவி  அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.இந்நிகழ்ச்சியில் தெற்கு கூடுதல் காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், தெற்கு மண்டல இணை ஆணையர் மகேஷ்வரி, தி.நகர் காவல் துணை ஆணையர் அரவிந்தன், உதவி ஆணையாளர்கள், ஆய்வாளர்கள், காவலர்கள்  மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: