இந்திய வான்பரப்புக்குள் கடந்த 27-ம் தேதி 2 சீன ஹெலிகாப்டர்கள் நுழைந்ததாக தகவல்

டெல்லி: கடந்த 27-ம் தேதி அத்துமீறி இந்திய வான்பரப்புக்குள் நுழைந்து 2 சீன ஹெலிகாப்டர்கள் 10 நிமிடங்கள் வட்டமடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. லடாக்கையும், திபெத்தையும் இணைக்கும் பூஞ்ச் பகுதி இந்திய  வான்வெளி பகுதியில் 2 சீன நாட்டைச் சேர்ந்த ஹெலிகாப்டர்கள் நுழைந்து உள்ளன. லடாக் பகுதியில் நுழைந்த ஹெலிகாப்டர்கள் அப்பகுதியல் 10 நிமிடங்கள் வட்டமிட்டதாகவும், பின்னர் 2 சீன ஹெலிகாப்டர்கள் திரும்பிச்  சென்றதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே சீன ராணுவ ஹெலிகாப்டர்கள் இந்திய வான்பரப்புக்குள் 4 முறை அத்துமீறி நுழைந்ததாக கடந்த மார்ச் மாதத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 27-ம் தேதியும் நுழைந்ததாக தகவல்  தெரிவிக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஹெலிகாப்டர் ஒன்று இந்திய வான்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்ததாகவும், அதில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிரதமர் ராஜா ஃபரூக்  ஹைதர்கான் உள்ளிட்டோர் இருந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: