ஜோத்பூர் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் ஒரே நாளில் பிரபலமாக வதந்தி பரப்பியவர் கைது: பரபரப்பு வாக்குமூலம்

சென்னை: மக்களிடம் பிரபலம் ஆக வேண்டும் என்பதற்காக ஜோத்பூர் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கைது செய்யப்பட்டவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். ஜோக்பூர் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து எழும்பூர் ரயில்வே காவல் நிலைய தனிப்படை  ேபாலீசார் வழக்கு பதிவு செய்தனர். இன்ஸ்ெபக்டர் தாமஸ், ரோஜா தலைமையில் குற்றவாளியை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், ராயப்பேட்டையில் உள்ள வீட்டில் வைத்து குற்றவாளியை நேற்று பிற்பகல் 2 மணிக்கு போலீசார் கைது செய்தனர். அதன்பிறகு நடத்திய விசாரணையில் ராயப்பேட்டை மிர்ஸான் ஹைதர் அலிகான் தெருவை சேர்ந்தவர் இக்பால் உசேன் (40). இவர் தற்போது ராயப்பேட்டை பகுதிகளில் தண்ணீர் கேன் சப்ளை செய்து வருகிறார். இவர் இரவு நேரங்களில் டிவி சேனல்களில் செய்திகளை பார்ப்பது வழக்கம்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் வீட்டில் உட்கார்ந்து டிவியில் செய்திகள் பார்த்துக் கொண்டு இருக்கும் போது சேனல்களில் பரபரப்பான செய்திகள் வருவதை பார்த்து தானும் மக்களிடம் ஏதாவது கூறி பரபரப்பு ஏற்படுத்த வேண்டும். அதற்கு ஏதாவது வதந்தி பரப்பினால் ஒரேநாளில் பிரபலம் ஆகிவிடலாம் என்று நினைத்து அவரது செல்போனில் இருந்து பொய்யான செய்தியை டைப் செய்து அனுப்பியது ெதரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குபதிவு செய்து இக்பால் உசேனை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: