பாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் கவிஞர் மீது இயக்குனர் சுசிகணேசன் அவதூறு வழக்கு தொடர்ந்தார்

சென்னை: பாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் கவிஞர் மீது இயக்குனர் சுசிகணேசன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். மீ டூ ஹேஷ்டேக் மூலம் நடிகைகள், பாடகிகள் உள்பட பலர் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவு குறித்து டிவிட்டரில் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில்,  கவிஞர் லீனா மணிமேகலை தனது டிவிட்டரில், இயக்குனர் சுசிகணேசன்  தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த இயக்குனர் சுசிகணேசன் உதவி இயக்குனர், பாடல் ஆசிரியர் என இரு வாய்ப்புகளை லீனா மணிமேகலை கேட்டார். இரண்டுமே என்னால் செய்ய முடியவில்லை. குடும்ப வாழ்க்கையில் தோற்று, கவிஞர் வாழ்க்கையும் கிட்டாத நிலையில் அழுக்குகள் நிறைந்த அவரது சொந்த வாழ்க்கையில் காரித் துப்ப முடியாமல், ஏனோ என் மீது வன்மையை துப்பியிருக்கிறார் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த சம்பவம் சினிமாவிலும், டிவிட்டரிலும் பெரும் பரபரப்பை ஏறபடுத்தியுள்ளது. இந்த நிலையில் சென்னை சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இயக்குனர் சுசி கணேசன் லீனா மணிமேகலைக்கு எதிராக அவதூறு வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில், ‘’என் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் எந்த ஒரு அடிப்படை ஆதாரமின்றி, பொய்யான புகாரை, குற்றச்சாட்டை லீனா மணிமேகலை பதிவிட்டுள்ளார். இதனால் மிகப்பெரிய மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ேளன். சுய விளம்பரத்திற்காக லீனா மணிமேகலை இது போல ஒரு அவதூறு பரப்பி உள்ளார். எனவே இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் அவருக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: