தாமிரபரணி மகா புஷ்கர விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புனித நீராடினார்

நெல்லை: நெல்லையில் தொடங்கி இருக்கும் தாமிரபரணி மகா புஷ்கர விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்துக் கொண்டு புனித நீராடினார். மஹா புஷ்கரத்தையொட்டி அவர் துறவிகள் மாநாட்டையும் தொடக்கி வைத்தார். 140 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தாமிரபரணி மகா புஷ்கர விழா நெல்லை பாபநாசத்தில் கோலாகலமாக தொடங்கியது.

பாபநாசம் முதல் தாமிரபரணி கடற்கரை வரை அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். தாமிரபரணியில் நீராட பல்வேறு மாநிலங்களில் இருந்து துறவிகள், பொதுமக்கள் நெல்லைக்கு வருகை தந்துள்ளனர்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மஹா புஷ்கரத்தில் கலந்துக்கொள்வதற்காக சென்னையில் இருந்து சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் தென்காசி வந்தடைந்தார். அவருக்கு தென்மண்டல ஐ.ஜி மாவட்ட ஆட்சியர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் குற்றாலம் விருந்தினர் மாளிகைக்கு சென்ற ஆளுநர் அங்கிருந்து பாபநாசத்திற்கு வருகைதந்திருந்தார். பின்னர் புனித நீராட வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு ஆளுநரை அழைத்து சென்றனர். தொடர்ந்து ஆளுநர் புனித நீராடினார். மேலும் துறவிகள் மாநாட்டையும் தொடக்கி வைத்தார் 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: