சேலத்தில் தனியார் மருத்துவமனையில் வருமான வரித் துறையினர் சோதனை

சேலம்: சேலத்தில் தனியார் மருத்துவமனைகளில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வரி ஏய்ப்பு புகாரையடுத்து சேலம் மருத்துவமனையில் வருமான வரித்துறையினர் நேற்று நண்பகல் தொடங்கி இரவு வரை அதிரடி சோதனை நடத்தினர். 10 மணி நேரம் வரை நீடித்த இந்த சோதனையில் வரி ஏய்ப்பு செய்ததற்கான பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இதே போல் சேலம் மூன்று ரோடு அருகே இருக்கும் நியூரோ பௌன்டேசன் என்ற மருத்துவமனையிலும் வருமான வரித்துறையினர் தீடீர் சோதனை நடத்தினர். வருமான வரி சோதனைக் குறித்து கூறிய அதிகாரிகள் கடந்த சில ஆண்டுகளாக பெரிய அளவில் இயங்கி வரும் மருத்துவமனைகளில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர். மருத்துவக்காப்பீடு அடிப்படையில் செய்யப்படும் சிகிச்சையிலும் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை மற்ற மருத்துவமனைகளிலும் தொடரும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.        

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: