தமிழகத்தில் அடுத்த மாத இறுதிக்குள் 3 ஆயிரம் பள்ளிகளில் ‘ஸ்மார்ட் கிளாஸ்’: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

சென்னை: சென்னை போரூர் லட்சுமி நகர் பகுதி  அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பு கட்டிட திறப்பு விழா நேற்று நடந்தது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்  ஸ்மார்ட் வகுப்பு கட்டிடத்தை திறந்து வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது : நவம்பர் மாத இறுதிக்குள் மாணவர்களுக்கு சைக்கிள், மடிக்கணினி வழங்கப்படும். 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்காக தனியார்  பள்ளிகளை  மிஞ்சுகிற அளவுக்கு சீருடை வடிவமைக்கப்பட்டுள்ளது.  ஸ்மார்ட் கிளாஸ் 3 ஆயிரம் பள்ளிகளில் நவம்பர் மாத இறுதிக்குள் நிறைவேற்றப்படும். 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளி  மாணவர்கள் வகுப்பறையில் கம்ப்யூட்டர் மயமாக்கப்படும். அதில் இன்டர்நெட் இணைக்கப்படும். தானியங்கி வருகை பதிவேடு முன்னோட்டமாக தற்போது பொருத்தப்பட்டு உள்ளது. 15   நாட்கள் கழித்து எந்தெந்த பள்ளியில் அமைக்கலாம் என முதல்வருடன் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும். ஆசிரியர்களுக்கான வருகை பதிவேடு பயோ மெட்ரிக் முறை பணியும் டிசம்பர்  மாத இறுதிக்குள் தொடங்கும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: