×

காம்ப்ளக்ஸ் உரம் மூட்டைக்கு ரூ45 விலை உயர்வு

வேலூர்: காம்ப்ளக்ஸ் உரம் மூட்டைக்கு 45 அதிகரித்துள்ளதாக வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் கொச்சி உர நிறுவனத்தில் இருந்து 1,888 டன் காம்ப்ளக்ஸ் மற்றும் அம்மோனியம் சல்பேட் உரங்கள் சரக்கு ரயிலில் நேற்று காட்பாடி வந்தது. இதுகுறித்து வேளாண் உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) சுஜாதா கூறுகையில், ‘1253 டன் காம்ப்ளக்ஸ் உரம், 635 டன் அம்மோனியம் சல்பேட் உரம் கொச்சியில் இருந்து வந்துள்ளது. வேலூர் மாவட்டத்திற்கு 258 டன், காஞ்சிபுரத்திற்கு 310 டன், திருவண்ணாமலைக்கு 100 டன், திருவள்ளூருக்கு 585 டன் காம்ப்ளக்ஸ் உரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 50 கிலோ கொண்ட ஒரு மூட்டை காம்ப்ளக்ஸ் ரூ970ல் இருந்து ரூ40 உயர்ந்து ரூ1,015க்கு விற்கப்படும். அம்ேமானியம் சல்பேட் 50 கிலோ கொண்ட ஒரு மூட்டை ரூ675க்கு கடைக்காரர்கள் விற்க வேண்டும். கூடுதல் விலைக்கு உரங்கள் விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Complex, compost bundle, price rise
× RELATED தங்கம் விலையில் மேலும் மாற்றம்...