குன்னூர், கோத்தகிரியில் உள்ள டேன் டீ தொழிற்சாலைகளுக்கு பூட்டு

குன்னூர்: இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தமிழர்களுக்காக, திமுக ஆட்சி காலத்தில் தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகமான டேன் டீ துவங்கப்பட்டது. இதில் வால்பாறை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டேன் டீ தோட்டங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.  டேன் டீ நிறுவனத்தின் நிர்வாக சீர்கேடு காரணமாக, தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கியதால் தொழிலாளர்களுக்கு குறித்த நேரத்தில் சம்பளம் வழங்க இயலாத நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தமிழக அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் சார்பில் வலியுறுத்தியும் தமிழக அரசு இதுவரை டேன் டீ நிர்வாகத்திற்கு எந்த நிதியும் வழங்கவில்லை.

கடந்த 3 மாதங்களாக குன்னூரில் உள்ள டேன் டீ தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காததால், தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று கோத்தகிரி பகுதியில் உள்ள குயின்சோலை மற்றும் குன்னூரில் உள்ள டைகர்ஹில் டேன் டீ தொழிற்சாலை திடீரென மூடப்பட்டது. அலுவலகத்தின் வாசலில் எந்த அறிவிப்பும் இல்லாமல் பூட்டு போடப்பட்டதால் தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.   இதுகுறித்து தொழிற்சங்க நிர்வாகிகள் டேன் டீ அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, `அவர்கள் உரிய தகவல் தெரிவிக்கவில்லை’ என கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: