லாரி சரக்கு கட்டணம் உயர்வு எதிரொலி அரிசி, பருப்பு விலை 5 வரை உயருகிறது: பொதுமக்கள் கடுமையாக பாதிப்பு , சில நாளில் மேலும் அதிகரிக்கும்

* பெட்ரோல், டீசல் விலை உயர்வால் லாரி சரக்கு கட்டணம் 25 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

* இதனால் அரிசி, பருப்பு, உணவு பொருட்கள் கிலோ 2 முதல் 5 வரை உயருகிறது.

சென்னை: லாரி சரக்கு கட்டணம் உயர்வு எதிரொலியாக அரிசி, பருப்பு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.5 வரை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். பெட்ரோல், டீசல் விலை என்பது நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. தினமும் 10 பைசா, 20 பைசா, 25 என்று தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. நேற்றைய நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.86.13, டீசல் ரூ.78.36க்கும் விலை இருந்தது. இப்படியே விலை உயர்ந்து கொண்டே போனால் ெபட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100ஐ விரைவில் தொட்டு விடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால், வரும் நாட்களில் வாகனங்களை பயன்படுத்த முடியாத நிலைக்கு வாகன ஓட்டிகள் தள்ளப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் டீசல் விலை உயர்வால் லாரி போன்ற வாகனங்களை இயக்க முடியாத நிலை உரிமையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், லாரிகளில் ஏற்றப்படும் சரக்கு கட்டணம் கடந்த திங்கட்கிழமை முதல் அதிரடியாக உயர்த்தப்பட்டது. அதாவது, சரக்கு கட்டணம் 25 சதவீதம் உயர்த்தப்பட்டது. சரக்கு கட்டணம் உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு பொருட்களும் கிலோவுக்கு ரூ. 5 வரை உயரும் என்று வியாபாரிகள் கூறியுள்ளனர். இது குறித்து தமிழ்நாடு அனைத்து மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.பி.சொரூபன் கூறியதாவது: தமிழ்நாட்டில் பருப்பு, பயறு வகைகள் எதுவும் விளைச்சல் கிடையாது. அந்தந்த மாவட்டங்களில் விளையும் பொருட்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு மட்டும் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சென்னைக்கு வராது. பிறமாநிலங்களை நம்பி தான் தமிழகம் உள்ளது.

அதாவது பூண்டு, குஜராத், மத்திய பிரதேசத்தில் இருந்தும், புளி கர்நாடகாவில் இருந்தும், நீட்டு மிளகாய் ஆந்திராவில் இருந்தும், குண்டு  மிளகாய் விளாத்திகுளம், ராமநாதபுரம், பரமக்குடியில் இருந்தும் வருகிறது. துவரம் பருப்பு குஜராத், மத்திய  பிரதேசம், உத்தரபிரதேசம், மகராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும், கடலைப்பருப்பு  அரியானா, டெல்லியில் இருந்தும் வருகிறது. அரிசி தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் வருகிறது. அப்படி வரும் பொருட்கள் அனைத்தும் பெரும்பாலும் லாரிகள் மூலம் தான் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் லாரி சரக்கு கட்டணம் 25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அரிசி, பருப்பு மற்றும் உணவு பொருட்களின் விலை ரூ.2 முதல் ரூ.5 வரை உயரும். சர்க்கரையை பொறுத்தவரை கிலோவுக்கு ரூ.2 வரை உயரும். மாத கடைசி என்பதால் இந்த ஒரு வாரத்துக்கு வியாபாரம் இருக்காது. அதன் பிறகு நிலவரத்தை பொறுத்து விலை உயரும்.

செப்டம்பர், அக்ேடா பரில் விளைச்சல் குறைவாக இருக்கும். டிசம்பர், ஜனவரி மாதத்தில் தான் விளைச்சல் இருக்கும். இதனால் வரும் மாதங்களில் அரிசி, பருப்பு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை உயர கூடும். இவ்வாறு அவர் கூறினார். ஏற்கனவே அத்தியாவசிய பொருட்கள் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உள்ளது. இந்த நிலையில் மேலும் பொருட்கள் விலை உயர்வு என்பது பொதுமக்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தும் சூழ்நிலையே உருவாகியுள்ளது. விலை உயர்வுக்காக கூடுதலாக பட்ெஜட்டில் பணம் ஒதுக்கும் நிலைக்கு இல்லத்தரசிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: