சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுப்பு: அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்தது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பழமையான கோவில்களில் இருந்து, புராதான சாமி சிலைகள் பல கொள்ளை அடிக்கப்பட்டது. சர்வதேச சிலைக் கடத்தல் கும்பல்களுடன் கை கோர்த்து, இந்த கொள்ளை சம்பவத்தில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகள் செயல்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி மகா தேவன், இந்த சிலைக் கடத்தல் வழக்குகளை எல்லாம் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரிக்க உத்தரவிட்டார்.

இந்த சிலை கடத்தல் வழக்கில், அரசு தலைமை ஸ்தபதி முத்தையா, இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா உள்பட பல முக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் பலரை கைது செய்ய பொன்.மாணிக்கவேல் நடவடிக்கை எடுத்து வந்த நிலையில், தமிழக அரசு சிலைக் கடத்தல் வழக்குகள் அனைத்தையும் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றுவதாக கூறி, அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர், அரசாணைக்கு தடை விதித்ததுடன், விளக்கமளிக்க சிபிஐக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுப்பு தெரிவித்து கடிதம் அனுப்பப்பி உள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றும் முன் உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் முதலில் அரசாணை பிறப்பித்தது ஏன்? என்றும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதனையடுத்து, பதிலளிக்க தமிழக அரசு சார்பில் அவகாசம் கோரப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: