×

உற்பத்தி அதிகரிப்பால் தேங்காய் விலை சரிவு ஒரு கிலோ ரூ.28க்கு விற்பனை

பொள்ளாச்சி:  கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில், தென்னை விவசாயம்  அதிகமாக நடைபெறுகிறது. இங்கு உற்பத்தியாகும் தென்னை  சார்ந்த பொருட்களுக்கு நல்ல  வரவேற்பு உள்ளது. இதில் சுற்றுவட்டார பகுதியில் உற்பத்தியாகும்  தேங்காய்க்கு அதிக கிராக்கி உள்ளது. பொள்ளாச்சியில்  உற்பத்தியாகும்  தேங்காய் உள்ளூர் மட்டுமின்றி, வெளி மாவட்டங்களுக்கும், வெளி  மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால்,  கடந்த 2  ஆண்டாக பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால், கடும் வறட்சி ஏற்பட்டது.  இதனால் தேங்காய் விளைச்சல் குறைந்து, வெளியிடங்களுக்கு அனுப்புவது   குறைந்தது. போதிய விளைச்சல் இல்லாததால், இந்த ஆண்டு துவக்கத்தில், ஒருகிலோ  தேங்காய் ₹45 முதல் அதிகபட்சமாக ₹50 வரை கூடுதல் விலைக்கு விற்பனை   செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த மே மாதம் பெய்த கோடை மழைக்கு  பிறகு, ஜூன் மாதத்திலிருந்து சுமார் மூன்று மாதம் தொடர்ந்து தென்மேற்கு  பருவமழை பெய்தது.


இதனால்,  சுற்றுவட்டார கிராமங்களில் தேங்காய் விளைச்சல்  அதிகரிக்க துவங்கியுள்ளது. இந்தநிலையில், கேரளாவில் ஏற்பட்ட வெள்ள  பாதிப்பால், அம்மாநிலத்துக்கு தேங்காய் அனுப்புவது குறைந்துள்ளதாக  வியாபாரிகள் கூறுகின்றனர். இதனால்,  பொள்ளாச்சி பகுதியில் தேங்காய் விலை  குறைந்து வருகிறது. கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஒருகிலோ ₹50 வரை  விற்பனையான தேங்காய், தற்போது ஒருகிலோ மொத்த  விலைக்கு ₹28க்கும், சில்லரை  விலை ₹32 என குறைந்த விலைக்கு விற்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Coconut,decline,sold, kilo 28
× RELATED ஈரோடு பவானி சட்டமன்ற தொகுதியில் தடுப்பூசி போட்டால் தங்க காசு