கலைஞருக்கு அஞசலி செலுத்த வந்த ராகுலுக்கு பாதுகாப்பு குறைபாடு : மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னையில் கலைஞருக்கு அஞசலி செலுத்த வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பாதுகாப்பு குறைபாடு குறித்து மத்திய அரசு 4 வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக தலைவர் கலைஞருக்கு அஞ்சலி  செலுத்த வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி போலீசாரின் அலட்சியத்தால் ராஜாஜி அரங்கில் நெரிசலில் சிக்கி தவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்கறிஞர் சூர்ய பிரகாசம் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

கலைஞருக்கு அஞசலி செலுத்த வந்த ராகுல்காந்திக்கு பாதுகாப்பு குறைபாடு என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார். கலைஞர் உடலுக்கு அஞ்சலி செலுத்த பொதுமக்கள் அண்ணாசாலை வழியாகவும், முக்கிய பிரமுகர்கள் வாலாஜா சாலை வழியாகவும் ராஜாஜி அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர். போலீஸ் அலட்சியத்தால் மூடப்பட்டிருந்த கதவுகள் திறக்கப்பட்டதால் நலாபுறம் இருந்தும் மக்கள் முண்டியடித்தனர்.

இந்த சூழ்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ராஜாஜி அரங்கிற்கு வந்தார். அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க போலீசார் முன் வராததால் பெரும் நெரிசலில் சிக்கி தவித்தார். வெகுநேரத்திற்கு பின் காவல்துறை உயரதிகாரிகள் வந்து ராகுல்காந்தியை அழைத்துச் சென்றனர்.

மிக மிக முக்கியமான பிரமுகர்களுக்கான மத்திய அரசின் சிறப்பு பாதுகாப்பு படை பாதுகாப்பில் இருக்கிறார் ராகுல்காந்தி. இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சூர்யபிரகாசம் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக மத்திய அரசு 4 வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: