×

அணு அணுவாக நகர்கிறது கலைஞரின் இறுதி ஊர்வலம்..

இறுதி ஊர்வலம் தொடங்கிவிட்டது.. நூறு.. நூறு ஊர்வலங்களை வழிநடத்தி சென்ற தலைவனின் இந்த நீள் பயணத்தை மக்கள் வழிநடத்தி செல்கிறார்கள்...
நீதி கேட்டு பல லட்சம் மயில்கள் நடந்த தலைவனின் இறுதி பயணம்.. கோடானகோடி கண்ணீர் துளிகளின் மேல் மிதந்து கொண்டிருக்கிறது..
ஒரு தலைவனின் முகத்தை கடைசியாக காண.. ஒரு தலைவனின் கரத்தை கடைசியாக தொட.. லட்சோப லட்சம் மக்கள் அலைமோதுகிறார்கள்... தடியடி படுகிறார்கள்... நெரிசலில் மிதிப்படுகிறார்கள்..
கண்ணுக்கு தெரியாத ஒரு அழைப்பு அவர்களை ஆட்கொள்கிறது...
அவர்களால் அந்த கரகரத்த குரலின் அழைப்பை ஒருபோது மறுக்க முடிந்தது இல்லை...
குடிக்க தண்ணீர் இல்லை... நிற்க நிழல் இல்லை...
யாருக்கும் எந்த புகாரும் இல்லை...
மக்கள் அலை அலையாக வந்து கொண்டிருக்கிறார்கள்...
மீட்க முடியாததை.. மீட்பதற்காக முழக்கமிடுகிறார்கள்...
சொல்ல முடியாததை சொல்வதற்காக வாய் விட்டு அழுகிறார்கள்...
ஒரு திருநங்கை நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுகிறாள்...
கட்டை ஊன்றி நடக்கும் ஒரு மனிதன் கூட்டத்தில் தடுமாறி விழுகிறான்...
ஒரு எளிய மனிதனின் மூக்கு கண்ணாடி தவறி விழுகிறது...
அவர்களுக்கு தான் தெரியும் தங்கள் தலைவன்..
அவன் தங்களை போன்றே ஒரு எளிய மனிதன் என்று ..
அவன் தங்களை போன்றே அநீதி இழைக்கப்பட்டவன் என்று...
அவன் தங்கள் குறுதியில் இருந்து முளைத்து வந்தவன் என்று..
அவனே அவர்களுக்கு மகனாக இருந்தான் என்று..
அவனே அவர்களுக்கு தகப்பனாக இருந்தான் என்று..
அவனே அவர்களுக்கு மீ்ட்பனாக இருந்தான் என்று..
வரலாற்றின் கொடூராமான விதிகளுக்கு எதிராக அவனே கடைசி துருப்பு சீட்டாக இருந்தான் என்று அவர்களுக்கு தெரியும்..
பரிதவிக்கும் கரங்களுக்கு தான் தெரியும் பரிகொடுத்தல் என்றால் என்ன வென்று..
போராடுகிறவர்களுக்கு தான் தெரியும் போர்க்களத்தில் தங்கள் படைக்களமே இழப்பதென்றால் என்னவென்று..
இதோ தலைவனின் முகத்தில் பட்டுதெரிக்கும் இந்த அந்தியின் சூரியன் ஆயிரம் மடங்கு பிரகாசமுடையதாகிறது..
மக்கள் மேல் பொழியும் மழை துளிகள் காலத்தின் பாலைவனங்களை ஈரமாக்குகிறது.
ஒரு சித்தாந்தம் ஒரு தலைவனின் பெயராக இருந்தது..
ஒரு எதிர் குரல் ஒரு தலைவனின் உடலாக இருந்தது..
ஒரு போராட்டம் ஒரு தலைவனின் வாழ்வாக இருந்தது..
அம்பாள் எந்த காலத்தில் பேசினால் என்ற கேட்ட அந்த தலைவன் தான் ராமர் எந்த கல்லூரியில் படித்தார் என்று கேட்டார்.
அவன் தன் கையில் எடுத்த பகுத்தறிவின் பாழ் ஒரு போதும் உரைக்க திரும்பவில்லை..
ஒரு துயரமான இலை துயரத்தில் முடிந்துவிடுமா..
ஒர துயரமான கண்ணீர் ஒரு துயரத்தை வென்றுவிடுமா..
ஒரு இரங்கற்பா இரங்கும் இதயத்தை வென்றுவிடுமா..
அணு அணுவாக நகர்கிறது இறுதி ஊர்வலம்..
அது ஒரு நாளும் எங்கும் முடிவடையாத ஊர்வலம்..
லட்சியத்தின் கனல் நெஞ்சில் எழுகிறது..
நீதிக்கான கனவு கண்களில் படர்கிறது அது ஒரு போதும் அனையாத நெருப்பு..
அவன் மூட்டிய நெருப்பிற்கு  அவனே எல்லையாக இருந்தான்..
அவன் வளர்த்த வேள்விக்கு அவனே மெய்யாக இருந்தார்.
காலத்தின் நட்சத்திர கூட்டங்களுக்குள் ஒரு தலைவனின் முகம் அழிவற்ற நட்சத்திரமாகிகொண்டிருகிறது.
தலைவனை புதைத்த இடத்தில் வனங்கள் உருவாகும் பறைவைகள் கூடு கட்டும்..
நூறு நூறு வசந்த காலங்கள் வரும்..
எப்போதெல்லாம் இந்த நிலத்தின் மீது ஒடுக்கு முறையின் நிழல் படுகிறதோ அப்போதெல்லாம் தலைவன் உறங்கும் கடற்கரையில் ஆழிப்பேரலைகள் எழும்..
பிரமாண்டமான கடலில் பிரமாண்டமான இருள் கடிவதை கண்டு வீடு திரும்ப மணமில்லாமல் அங்கேயே நின்று கொண்டு இருக்கின்றேன் ..
போய் வா தலைவா...
நன்றி கவிஞர் மனுஷ்யபுத்ரன்


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags : RIPkarunanidhi,RIPkalaignar,Karunanidhi
× RELATED சுற்றுலா சென்ற போது வாலிபர் திடீர் மரணம்